| கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம் |
| [ Tuesday, 08 November 2011, 09:17.43 PM GMT +05:30 ] |
ஓடிக்கொண்டிருக்கிறது. |
இந்த படத்தை குறித்து சூர்யா அளித்த பேட்டியில் 7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகின்றது.
அறிவு" படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. நிறைய பாராட்டுகளும் குவிகின்றன. ரஜினி படம் பார்த்து கட்டிபிடித்து வாழ்த்தினார், கமலும் பாராட்டினார். நான் புது வீடு கட்டி வருகிறேன், இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன், படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார், என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. கமல் மகள் ஸ்ருதிக்கு வலுவான கதாபாத்திரம், அவருக்கு என்னை விட படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார். கதைப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். போதி தர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக வணங்குகின்றனர். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனைகள் வேறு மாதிரியாக இருக்கின்றது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு கொண்டு வர இந்த படம் பயன்பட்டு உள்ளது என்றார். ஸ்ருதி கமல் மகள் என்பதால் அவருடன் நெருங்கி நடிக்க பயம் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன்.படம் இறுதி காட்சியில் சண்டை பயிற்ச்சியில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். விஜய்யின் "வேலாயுதம்" படம் இன்னும் பார்க்கவில்லை. இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடுகின்றன. அடுத்து குடும்பபாங்கான படங்களில் நடிக்க உள்ளேன்.17ம் நூற்றாண்டு சரித்திர படமொன்றிலும் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்ட இருக்கிறேன். விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா என்று கேட்கின்றனர். ஆனால் கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று சூர்யா கூறினார். by A_S |
குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.
விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.
விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.
சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?

by
A_S
நான் நடித்த படங்களிலேயே "சிங்கம்" தான் அதிகம் வசூல் ஈட்டியது. அந்த வசூலை "7ஆம்