Thursday, November 10, 2011

ரகிகர் மன்ற கொடியா? அப்படி ஒரு ஐடியாவே இல்லை... சூர்யா

ரகிகர் மன்ற கொடியா? அப்படி ஒரு ஐடியாவே இல்லை... சூர்யா
 
           7ஆம் அறிவு படத்தின் வெற்றி உற்சாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூர்யா.  பல்வேறு கேள்விகளுக்கு சிரித்த முகமாக பதில் கூறினார். தனது படங்களின் கதைகளை யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை, யார்கிட்ட சொன்னானும் தகவல் எப்படியாவது வெளியே வந்துவிடுகிறது என்றார்.

 

தன் அப்பா சிவகுமார் படம் பார்த்து விட்டு பெசன்ட் நகரில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்து கட்டியணைத்து கண்கலங்கினார், இந்த மாதிரி அனுபவத்தை தன் தந்தையிடம் இருந்து முதல் முறை பெறுவதாக கூறினார்.  

ஏழாம் அறிவு படம் பார்க்க நான் ரஜினியை அழைத்ததும், ரஜினி உடனே ஒப்புக் கொண்டார்.  ரஜினி சார், சிவாஜி சார் குடும்பத்துடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்த பின் கைகொடுத்து கட்டியணைத்து விட்டு சென்றார் என்றார்.

கமல் படம் பார்க்கும்போது நான் அங்கே இல்லை. கமலின் பிறந்த நாளன்று அவரை வாழ்த்த கமல் வீட்டிற்க்கு சென்ற போது, கமல் படம் பார்க்கும் போது "பையன் ஃபுல் ஃபார்ம்ல இருக்கான்" என்று கூறியதாக வைரமுத்து சொன்னார். 'இத நீங்க சொல்வீங்கனு நான் எதிர்பார்க்கல' என்று கூறி கமல் நகைத்தார் என்று கமலின் கமெண்ட்ஸை பகிர்ந்துகொண்டார். 

விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அவர் இன்னும் 7ஆம் அறிவு படம் பார்க்கவில்லை. நானும் இன்னும் வேலாயுதம் படம் பார்க்கவில்லை. இரண்டும் வேற வேற மாதிரியான படம். ஒரு படம் கலர்ஃபுல்லா இருக்கும் போது, வித்யாசமான முயற்சி என்று இன்னொரு படம் இருப்பது நல்லது தானே என்று கொஞ்சம் வார்த்தைகளை நழுவவிட்டார். இரண்டு படமுமே நன்றாக ஓடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

இலங்கையில் சில வசனங்கள், குறிப்பாக தமிழர்கள் விடுதலை சம்பந்தமான வசனங்களை நீக்கி உள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு அரசாங்கத்தை எதிர்க்க ஒரு தனி மனிதனாக எனக்கு சக்தி இல்லை என்றே நினைக்கிறேன்.  படத்திலிருந்து சில தகவல்களை தணிக்கை என்ற பெயரில் தடுத்து நிறுத்தினாலும், படத்தில் கூறப்பட்ட தகவல்கள் தமிழ் மக்களை சென்றடைந்தது மகிழ்ச்சியாக உள்ளாது. 

உங்க ரசிகர்கள் மன்றங்களுக்கு எப்போ தனியா கொடி கொடுக்க போறீங்கன்னு கேட்டா? அய்யயோ... அப்படி ஒரு ஐடியாவே இல்லீங்னா... இதுவே போதும்! நல்லாத் தானே போய்கிட்டு இருக்கு என்று வடிவேலு கணக்கா ஜகா வாங்கினார் சூர்யா.

by
A_S

No comments:

Post a Comment