
சத்யம் சினிமாஸில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், படத்தின் இயக்குநர் ராஜாமௌலி பேசுகையில், நான் சென்னையில் பிறந்து தமிழ்
இப்படம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில், ஒரு நடிகனின் வாழ்க்கைப் பற்றிய படம் இது. இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில்

சத்யம் சினிமாஸில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், படத்தின் இயக்குநர் ராஜாமௌலி பேசுகையில், நான் சென்னையில் பிறந்து தமிழ்
இப்படம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில், ஒரு நடிகனின் வாழ்க்கைப் பற்றிய படம் இது. இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில்
ஒரு பக்கம் 'சகுனி', இன்னொரு பக்கம் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மேக் அப் போட்டு வந்தார் கார்த்தி. 11-11-11 என்ற விசேஷ தேதியில் கார்த்தியின் பெயரிடப்படாத புதிய படத்தை தொடங்கினார்கள்.
மூன்று மாதங்களாக தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் இப்போது படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்'. இதுதான் படத்தின் தலைப்பு. 'மூன்றுமுகம்' படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் இது. ரஜினி ரசிகர்களை கவரும் இந்த தலைப்பு, தனது படத்திற்கு அமைந்ததை படக்குழுவினரிடம் சொல்லி மகிழ்கிறாராம் கார்த்தி.
'தலைநகரம்', 'படிக்காதவன்' படங்களை தொடர்ந்து சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
by
senthil

'ஆல் இன் ஆல் அழகுராஜா' இதுதான் கார்த்தி அடுத்து
நடிக்கும் படத்தின் பெயர். இயக்குநர் யார் தெரியுமா...
எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ்.
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல்
ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ்,
அடுத்து கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை
ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை
பிடித்துப் போனதால் ராஜேஷுக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்
கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குநர் சங்கர் தயாள்
இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத
படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு
ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம்
போல், தனது படத்திற்கு வித்தியாசமான தலைப்பை தேர்வு
செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல்
அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு
காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம
சந்தானம் தான்...! அசத்துங்க ராசா!
by
A_S

தீபாவளிக்கு வெளியான படம் '7ஆம் அறிவு'. சூர்யா,
ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். உதயநிதி தனது
ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். சூர்யா
ஏற்று நடித்த 'போதிதர்மன்' பாத்திரம் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம்
வெளியானது. தற்போது '7ஆம் அறிவு' படத்தை சர்வதேச பட
விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக,
படத்திற்கு சப்-டைட்டில் போடும் பணிகள் நடந்து
வருகின்றன. மேலும், சர்வதேச திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற
வகையில் படத்தில் தேவையற்ற காட்சிகளையும்
பாடல்களையும் நீக்கி விட்டு அனுப்ப உள்ளார்களாம். அப்போ..
வெட்டிங், ஒட்டிங் எல்லாம் முடிஞ்சிருச்சா...
by
A_S